Rock Salt (Pink ) 1kg
முதலாவதாக “ இந்துப்பு ” என்பது தமிழ்.. அதன் ஆங்கில மொழியாக்கத்தில் “ ராக் சால்ட் “ அதாவது பாறை உப்பு என பொருள்படும்..
இவை முதலில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆனது.. பின் இமைய மலையின் அடிவாரப் பகுதியில் இயற்கை சீற்றத்தின் விளைவாக நிலத்தின் அடிப்பகுதியில் உப்பு படிமங்கள் புவிஅழுத்தம் காரணமாக பாறைகளாக மாறின.. அதை சுரங்கம் தோண்டி உப்பு பாறைகளை வெட்டி எடுத்தினால் அதுவும் இமைய மலைப் பகுதிகளின் அருகில் இந்தியாவிலேயே எடுத்ததினால் ஹிமாலயா உப்பு .. அல்லது இந்திய உப்பு என்று அழைக்கப்பட்டு பின் பெயா் மருவியோ.. அல்லது மாற்றப் பட்டோ.. அது இந்துப்பு ஆனது…. அடுத்த விசயத்திற்கு வருவோம்..
உப்பு பல முறைகளில் தயாரிக்கப் பட்டாலும்.. முக்கியமாக இரண்டு முறைகளை குறிப்பிடலாம்.. ஒன்று ..கடற்பகுதிக்கு அருகில் இருக்கும் காரத் தன்மை அதிகம் உள்ள நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து நீரை எடுத்து நிலத்தில் பாய்ச்சி உப்பளங்களை உருவாக்கி அதில் உப்பு எடுப்பது ..( கடல் நீரில் இப்போது உப்பு எடுப்பது இல்லை.. ஏனெனில் செலவு மிக மிக அதிகம்.. என்பதால்..) .. இரண்டாவது அதை விட உப்பு அதிகமாகவும்.. செலவு குறைவாகவும்.. நிலத்தடியில் உப்பு பாறைகளை வெட்டி எடுக்கும் முறைதான் இப்போது 90 சதவீதம் நடைபெறுகிறது…. .. .. உங்கள் இல்லங்களில் உள்ள பிரபல கம்பெனியின் உப்பும் இந்த முறையில் தயார் ஆவதுதான்..
வெட்டி எடுத்து வந்த உப்பு பாறை கற்களை சிறு பொடி கற்களாக உடைத்து இளநீா்.. பழங்காடி.. பின் சுத்த நீர் ஒவ்வொன்றிலும் சில மணி நேரம் ஊற வைத்து.. பின் காய வைத்து நன்கு உலர்ததும் இதை 110 டிகிரி வெப்பத்தில் வறுக்கும் போது இந்த உப்பு கற்கள் வெடிக்கிறது.. அப்படி வெடித்ததை நயமாக அரைத்து சல்லடையில் சலித்து மாவு போல ஆக்குவதற்கு ஒருவாரம் ஆகிவிடுகிறது.. அதுவும் 100 கிலோ கற்க்கள் போட்டால் 40 கிலோதான் மிஞ்சுகிறது.. எதற்காக இவ்வளவு பிராசசிங் என கேட்டேன்.. உப்பில் அதிகம் சோடியம் உள்ளது.. அது உடலுக்கும்.. சிறுநீரகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.. அதனால் இந்த முறைகளில் சோடியத்தின் அளவை பத்து சதவீதத்திற்கும் கீழே கொண்டு வந்து விடுவதாகவும்.. தெரிவித்தார்..இரத்த அழுத்தம் உள்ளவா்களுக்கும்.. மற்றவா் அனைவருக்கும் சிறந்தது